×

நாகை அக்கரைகுளம் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பி மரக்கம்பம் நட்ட பொதுமக்கள்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

நாகை: நாகை அக்கரை குளம் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகை அக்கரைகுளம் தென்கிழக்குக் கரையின் படித்துறைக்கு அருகில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான உயர் அழுத்த மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இவ்வாறு தாழ்வாக செல்லும் மின் கம்பியை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் எளிதில் தொடும் நிலையில் உள்ளது. இதனால் எந்த நேரமும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மிகவும் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியை சீர் செய்ய பல முறை மின்சார வாரியத்தில் தெரிவித்து பயன் இல்லாமல் போனதால் அப்பகுதியைச் சேர்ந்த போதுமக்கள் மின் கம்பத்திற்கு மாறாக மரத்தால் செய்த கம்பு ஒன்றை மின் கம்பம்போல் தயார் செய்து அதில் மின்கம்பிகளை தூக்கி வைத்துள்ளனர். தற்பொழுது நாகை மாவட்டத்தில் அவ்வப்பொழுது பலத்த காற்று வீசுகிறது. அதோடு கன மழையும் பெய்து வருகிறது. இந்த நேரத்தில் மின்கம்பிகளை தாங்கும் கம்பு கீழே விழுந்தால் அந்த வழியாக செல்லும் கால்நடைகள் மீது உரசினால் கால்நடைகள் இறக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணி கூறியதாவது:நாகை அக்கரைகுளம் தென்கிழக்கு கரை படித்துறை பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்த மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் எந்த நேரமும் மனிதர்கள் அல்லது கால்நடைகள் மீது உரசினால் உயிர் இழப்பை ஏற்படுத்தும். இதனால் பொதுமக்கள் இணைந்து கம்புகளை கட்டி அதை மின்கம்பம் போல் செய்து உயர் அழுத்த மின்கம்பியை மேலே தூக்கி நிறுத்தி வைத்துள்ளோம். நாகை மாவட்டத்தில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் காற்று அடித்தால் மிகப்பெரிய ஆபத்து உருவாகும். அந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளுக்கும் அங்கு குடியிருப்போர்களும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு புதிய மின் கம்பத்தை அமைத்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags : area ,Nagarai Akkaraykulam ,Nakai Akkaraikulam , low-wattage, Nakai,Akkaraikulam area
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...